முடிவடையாத தார்சாலை பணி

Update: 2022-08-18 16:29 GMT

கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் பரமத்திக்குள் செல்ல பிரிவு சாலை உள்ளது. இந்த பிரிவு சாலையில் பைபாஸ் சாலையையும், பரமத்தி பிரிவு சாலையையும் இணைக்கும்‌ பகுதியில் தார்சாலை முழுமையாக அமைக்கப்படாததால் மண் சாலையில் செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. விபத்தை தடுக்க இணைப்பு சாலை பகுதியில் முழுமையாக தார்சாலை அமைக்க நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாணிக்கவேல், நாமக்கல்.

மேலும் செய்திகள்