தர்மபுரி மாவட்டம் ஏ.ரெட்டிஅள்ளி சவுருபட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக 2 கி.மீ. தொலைவில் உள்ள தர்மபுரிக்கும், 3 கி.மீ. தொலைவில் உள்ள பழைய தர்மபுரி மற்றும் பாலக்கோடுக்கும் சென்று வருகின்றனர். இவர்கள் பயன்படுத்தும் சாலையானது, ரெயில்வே மேம்பாலம் முதல் பாலக்கோடு செல்லும் சவுளூர் வரை சேதமடைந்துள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கலைவாணன், ஏ.ரெட்டிஅள்ளி, தர்மபுரி.