தார்ச்சாலை வசதி வேண்டும்

Update: 2022-08-16 15:05 GMT


நாகை ஒன்றியம் பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தனிருப்பு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இங்கு கீழத்தெரு நடுத்தெரு,காலனி தெரு, மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட தெருக்களில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. கடந்த சில வருடங்களாக இந்த சாலைகளை தார்ச்சாலையாக மாற்ற வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர் .இதுவரை சாலைகள் சரி செய்யப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

பொதுமக்கள்,குற்றம்பொருத்தனிருப்பு.

மேலும் செய்திகள்