திருவாரூர் மாவடடம் விளமல் அருகே வேலை வாய்ப்பு அலுவலகம் உள்ளது. இந்த சாலை கடந்த சில ஆண்டுகாள மண் சாலை தான் உள்ளது. அந்த சாலையும் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்த தார்ச்சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், விளமல்