சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-16 13:29 GMT


திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா கொரடாச்சேரி ஒன்றியம் வெண்ண வாசல் அருகே சாலை குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வெண்ணவாசல்

மேலும் செய்திகள்