பழுதடைந்த சாலைகள்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கரையோர பகுதிகளில் உள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. தற்போது வெள்ளம் வடி தொடங்கியுள்ளது. வெள்ளத்தின் காரணமாக நாதல்படுகை, முதலைமேடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்து கிடக்கின்றன. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே, இந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், நாதல்படுகை, முதலைமேடு.