மதுரை பெரியார் நிலையம் அருகே உள்ள தீயணைப்புத்துறை நிலையம் பகுதி சாலை முற்றிலுமா சேதமடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த சாலையில் காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மதுரையின் முக்கிய சாலையான இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?