எஸ்.குமாரபுரத்தில் கடலூர்- பண்ருட்டி சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. அப்பகுதியில் பள்ளி, கல்லூரி உள்ளதால், அந்த வழியாக செல்லும் மாணவர்கள் ஒருவித அச்சத்துடனே செல்கின்றனர். எனவே விபரீதம் ஏற்படும் முன் வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் அங்கு வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.