சிதம்பரம் அருகே சாலியந்தோப்பு கிராமத்தில் புதிதாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலியந்தோப்பு பகுதியில் உள்ள குழந்தைகள் கல்வி பயில நெடுஞ்சாலையை கடந்து கடவாச்சேரி கிராமம் சென்று வர வேண்டியுள்ளது. நெடுஞ்சாலை வழியாக வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நெடுஞ்சாலையை கடக்க நடைமேடை அமைக்க வேண்டியது அவசியமாகும்.