வீரபாண்டி ஒன்றியம் அக்கரைபாளையம் ஊராட்சி பாலம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வயதானவர்கள் மிகவும் அச்சத்தில் செல்கின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.