வர்ணம் பூசப்படாத வேகத்தடை

Update: 2025-12-21 18:02 GMT

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பாரதியார் சாலையை இணைக்கும் இடத்தில் ஸ்டேட் பேங்க் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையில் அடிக்கப்பட்டிருந்த வெள்ளை வர்ண கோடுகள் அழிந்த நிலையில், தற்போது வெள்ளை வர்ண கோடுகள் இல்லாமல் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் வேகமாக செல்லும்போது சாலையின் குறுக்கே வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி செல்கின்றனர். மேலும் இந்த வேகத்தடையின் அருகே சாலையில் பள்ளம் உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்