அந்தியூர் அருகே பிரம்மதேசம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காட்டுப்பாளையம் கிராமத்துக்கு செல்லும் 2 சாைலகள் பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது. குண்டும்-குழியுமான சாலையால் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் மட்டுமின்றி விளைபொருட்களை விற்க சந்தைக்கு எடுத்துச் செல்லும் விவசாயிகளும் கடும் அவதிப்படுகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?