நாகை மாவட்ட தாமைரக்குளம் சாலையில் பணி நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கும் பணி மிகவும் ஆமை வேத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பொதுமக்கள், நாகை