நாகை மாவட்டம் நாகூரில் உள்ள வெட்டாற்றில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் நாகை நகருக்குள் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பொதுமக்கள், நாகூர்.