சாலை அகலப்படுத்தபடுமா?

Update: 2022-08-13 15:41 GMT


கூத்தாநல்லூர் அருகே, வடபாதிமங்கலத்தில் இருந்து செல்லும் சாலையில், திட்டச்சேரி பிள்ளையார் கோவில் தொடங்கி வடவேற்குடி வரை ஆற்றங்கரையோரத்தில் உள்ள சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால், எதிர் எதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது மக்கள், திட்டச்சேரி

மேலும் செய்திகள்