சாலை சீரமைக்கப்படுமா?
பட்டுக்கோட்டையிலிருந்து புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சீதாம்பாள்புரம். இந்த ஊரில் புதிய தார்ச்சாலை போடப்போட்டுள்ளது .ஆனால் ஏனோ காரணத்தால் பாதியில் கைவிடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பட்டுக்கோட்டை