அந்தியூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் உள்ள தவுட்டுப்பாளையம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் தவுட்டுப்பாளையம் மார்க்கெட் பகுதியில் உள்ள சாலை மிகவும் குறுகலாக காணப்படுகிறது. மேலும் சாலையோரம் உள்ள சாக்கடை கால்வாய் உடைந்து சேதமடைந்துள்ளதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. சாலையை அகலப்படுத்தி, சேதமடைந்த சாக்கடை கால்வாயையும் சரிசெய்ய அதிகாரிகள் முன்வருவார்களா?