பாலத்தில் பள்ளம்

Update: 2022-08-13 12:23 GMT

பாலத்தில் பள்ளம்

திருக்காட்டுப்பள்ளியில் உள்ள காவிரி குடமுருட்டி ஆற்று பாலத்தின் மேல் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பாலம் வலுவிழந்த நிலையில் உள்ளது. பாலத்தில் இரண்டு சக்கர வாகனங்கள், கார்கள் சென்று வருகின்றன. பாலத்தின் மேற்புறம் போடப்பட்டுள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பாலத்தில் செல்லும் வாகனங்களால் பாலம் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து திருக்காட்டுப்பள்ளி காவிரி குடமுருட்டி ஆற்று பாலத்தின் மேல் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருக்காட்டுப்பள்ளி.

மேலும் செய்திகள்

சாலை வசதி