கோவில் நகரமாம் கும்பகோணத்தில் காலை 8மணி முதல் இரவு 9மணி வரை கும்பகோணம் மொட்டை கோபுரம் முதல் நான்கு ரோடு வரை, மற்றும் டைமண்ட் தியேட்டர் முதல் பாலக்கரை வரை,சாலையில் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள், பொது மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்த வேண்டும் ன்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீதா முருகானந்தம்,கும்பகோணம்