தாமதமாகும் பாலம் அமைக்கும் பணி

Update: 2022-08-09 17:06 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா ஆரியூரில் இருந்து கொளத்தூர் செல்லும் சாலையில் முத்துசாமி கோவில் பிரிவு அருகே பள்ளமாக உள்ளது. பாலம் அமைப்பதற்காக அந்த பகுதி பள்ளமாக விடப்பட்டது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் பாலம் அமைக்காததால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தாமதமாக நடக்கும் பாலம் அமைக்கும் பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குப்புசாமி, மோகனூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்