தஞ்சை -நாகை சாலையில் ஞானம் நகர் அருகில் பாதாள சாக்கடை கால்வாய் சீரமைப்பதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அனைத்து வாகனங்களும் ஒரு வழிப்பாதையில் சென்று வருகின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சாவூர்.