மயிலாடுதுறை அருகே பூம்புகார் சாலையில் மணக்குடி கிராமம் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிரிருந்து ஏராளமானோர் மணக்குடி வழியாக காவிரி ஆற்றை கடந்து தான் செல்ல முடியும். தரங்கம்பாடி சாலையில் கல்வி நிறுவனங்கள் உள்ளதால் ஏராளமான மாணவ- மாணவிகள் இந்த சாலையின் வழியாகத்தான் சென்று வருகின்றனர். மணக்குடியிலிருந்து காவிரிக்கரை வரை செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் மாணவ- மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை உடனே சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மணக்குடி.