மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு செல்லும் பிரதான சாலையில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்ததால் மழை நீர் தேங்கி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதிவாணன், தேவனூர்