தார்ச்சாலை வசதி வேண்டும்

Update: 2022-08-05 14:20 GMT

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சி அனந்தநல்லூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் மாரியம்மன் கோவில் தெருவில் இருந்து மேலத்தெரு வரை செல்லும் சாலை சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது.மேலும் சாலை பள்ளமாக இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிதாக தார்ச்சாலை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருமருகல்

மேலும் செய்திகள்