நாகை மாவட்டம் கருவேலங்கடை பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். மக்கள் நடமாட்டமும் அதிக அளவில் இருக்கும். இந்த நிலையில் இந்த பகுதியில் வாகனங்கள் அதி வேகமாக செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேவையான இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பொதுமக்கள் - கருவேலங்கடை