மயிலாடுதுறை மாவட்டம் காமராஜர் சாலை சேதமடைந்து மேடும், பள்ளமுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது மழை பெய்ததால் மேடு, பள்ளங்களில் மழை தண்ணீர் தேங்கி விடுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர். மேலும் மழை பெய்ததால் சேறும், சகதியும் நிரம்பிவிடுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மயிலாடுதுறை.