விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2022-08-03 13:45 GMT


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவிலிருந்து ஆற்றங்கரைக்கு செல்லும் சாலையில் தார்ச்சாலை அமைப்பதற்காக பணிகள் கருங்கல் ஜல்லிகள் கொட்டப்பட்டு உள்ளன. ஆனால் ஏனோ காரணத்திற்காக சாலை பணிகள் நடைபெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களும் அடிக்கடி சேதமடைகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விரைந்து தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருமணஞ்சேரி.

மேலும் செய்திகள்