மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் மே மாத்தூர் ஊராட்சியில் கண்டியன் கடலி மேல தெருவில் பழைய கப்பி சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்ததால் மேடு, பள்ளங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,மேமாத்தூர்