குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-01 13:29 GMT


நாகை மாவட்டம் தெற்குபொய்கைநல்லூரில் உள்ள பாலகிருஷ்ணன் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்ததால் மேடு, பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தெற்கு பொய்கை நல்லூர்.

மேலும் செய்திகள்