நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர்-திட்டச்சேரி இடையே உள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது. மேலும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதன்காரணமாக வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருமருகல்