சாலையின் மோசமான நிலை

Update: 2022-07-31 14:39 GMT
பெங்களூரு கோரமங்களா 100 அடி சாலையில் மெட்ரோ ரெயில் பாதை பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது ஒருபுறம் இருக்க அந்த 100 அடி சாலை மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. அதாவது சாலையின் பெரும்பாலான இடங்களில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் அந்த சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது