தஞ்சை நகரில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது. அதன் பிறகு புதிதாக தார்ச்சாலை போடப்பட்டது. இந்த நிலையில் மேரீஸ் கார்னர், கோர்ட்டு சாலை, நாஞ்சிக்கோட்டை சாலை உள்ளிட்ட பல்வேறு சாலையில் பாதாள சாக்கடை குழாயிலிருந்து இணைப்பு கொடுக்கப்பட்ட பகுதி வரை சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வேகமாக வரும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உள்வாங்கும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சை.