குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-29 12:38 GMT
திருச்சி விமான நிலையத்தில் இருந்து கே.கே.நகர், எல்.ஐ.சி.காலனி, உடையான் பட்டி, ஓலையூர், சுந்தர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் வயர்லெஸ் சாலை வழியாகத்தான் செல்வார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிதிலமடைந்த வயர்லெஸ் சாலை சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மீண்டும் சாலை முழுவதும் சிதிலமடைந்து குண்டும், குழியுமான காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்