நாமக்கல் அருகே உள்ள களங்காணியில் இருந்து திருமலைப்பட்டி செல்லும் சாலை உள்ளது. அங்கு இரு வேறு இடங்களில் புதிதாக வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மீது வெள்ளை நிற வர்ணம் பூசப்படாமல் உள்ளது. அதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக வரும் 2 சக்கர வாகன ஓட்டிகள் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் அதன் மீது ஏறி நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு வேகத்தடைகள் மீது வெள்ளை நிற வர்ணம் பூச சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திருமலை, நாமக்கல்.