வேகத்தடைகள் அமைக்கப்படுமா?

Update: 2022-07-28 17:57 GMT

நாகமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் இருந்து கரூர் நோக்கி செல்லும் பஸ்களும், கரூரில் இருந்து பரமத்திவேலூர் நோக்கி வரும் பஸ்களும் அதிவேகமாக திருவள்ளுவர் சாலை மற்றும் அரசு மருத்துவமனை பகுதியில் வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் மருத்துமனைக்கு வரும் நோயாளிகளும், பொதுமக்களும், பள்ளி செல்லும் மாணவர்களும்‌ அச்சத்தோடு சாலையில் செல்கின்றனர். எனவே விபத்துகளை தடுப்பதற்கு அரசு மருத்துவமனை அருகில் உள்ள காமராஜர் சிலை அருகேயும், திருவள்ளுவர் சாலை பகுதியில் உள்ள வளைவின் இரு பகுதிகளிலும் வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

-ஜீவா, பரமத்திவேலூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்