நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி 3-வது வார்டு பாரதிநகரில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சாலைகள் போடுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியது.. முதல் கட்டமாக ஜல்லி கற்கள் பரப்பப்பட்டன. 6 மாதங்களாக சாலைகள் புதுப்பிக்கப்படாமல் இருப்பதால் இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் வாகனங்கள் செல்வதற்கு மிகவும் கடினமான சூழ்நிலை உள்ளது. எனவே பாரதி நகரில் பாதியில் நிற்கும் சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
-முகிலன், ராசிபுரம்.