ரெயில்வே கீழ்பாலம் சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-27 11:15 GMT


நீடாமங்கலம் ரெயில்நிலைய வளாகத்தில் சிறிய கீழ்பாலம் உள்ளது. நீடாமங்கலத்தில் ரெயில்வேகேட் மூடப்படும் போதெல்லாம் இந்த கீழ்பாலத்தின் வழியாகத்தான் வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளது.தற்போது மழை பெய்ததால் சேறும்,சகதியுமாக உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாரன்,நீடாமங்கலம்.

மேலும் செய்திகள்