தஞ்சையில் பல இடங்களில் வேகத்தடை உள்ளது. ஆனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் உள்ளது. குறிப்பாக நாஞ்சிக்கோட்டை சாலை, கோர்ட்டு சாலையில் உள்ள வேகத்தடையில் வண்ணம் பூசப்படாததால் வேகத்தடை இருப்பது தெரிவது இல்லை. இதனால் அனைத்து வாகனங்களும் வேகமாகவே செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வண்ணம் பூச வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சாவூர்.