குழியை மூட வேண்டும்

Update: 2023-09-13 17:25 GMT

நல்லம்பள்ளி அருகே கம்மம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நார்காரன்கொட்டாய் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 200-க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலையில் குழிதோண்டி உள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி, குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சுப்பிரமணி, கம்மம்பட்டி, தர்மபுரி.

மேலும் செய்திகள்