தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் மண்டு நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகிறார்கள். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சிவன், பாலக்கோடு, தர்மபுரி.