தர்மபுரி மாவட்டம் நூலஅள்ளி ஊராட்சி நூலஅள்ளி கிராமத்தில் இருந்து வேடிக்கொட்டாய் வரை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. புதிதாக சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியை மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும்.
-பசுபதி, தர்மபுரி.