தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த நாகமரை மேச்சேரி இணைப்பு சாலையான இந்த மூன்று சாலை இணையும் இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதன் அருகில் அரசு மருத்துவமனையும், போலீஸ் நிலையமும் இருப்பதால் மக்கள் தொகை அதிகமாக காணப்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் விபத்தை தடுக்க அந்த பகுதியில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
-சந்தோஷ் இந்திரா நகர்,ஏரியூர்.