தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா எர்ரணஹள்ளி ஊராட்சியில் மூங்கப்பட்டி, ரெட்டியூர், சமத்துவபுரம், வி.செட்டிஏரிபள்ளம் வரை உள்ள தார்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பழனிவேல், பாலக்கோடு.