தர்மபுரி நகராட்சியில் தினமும் காலை முதல் இரவு வரை பிரதான சாலைகளில் வாகன ஓட்டிகள் பரபரப்பாக சென்று வருகின்றனர். குறிப்பிட்ட சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் நடந்த வண்ணம் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றினால் விபத்துகளை தவிர்க்கலாமே!
-முத்து, தர்மபுரி.