தர்மபுரி மாவட்டம் 27-வது வார்டில் பெரும்பான்மையான தெருக்கள் ஆக்கிரமிப்பால் மிகவும் குறுகலாக உள்ளன. குறிப்பாக நரசிம்மாச்சாரி தெரு, காந்திநகரில் உள்ள சாலைகள் குறுகலாக உள்ளதால் இந்த தெருக்களில் வாகனங்கள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றன. மேலும் வேகமாக செல்லும் போது விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த இந்த தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை விரிவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாபு, தர்மபுரி.