குண்டும், குழியுமான சாலை

Update: 2023-06-21 17:23 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா பிக்கிலி ஊராட்சி தண்டுகாரனஅள்ளி, குறவன் திண்ணை, எம்.கே.நகர் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் தார்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரைமக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பசுபதி, பென்னாகரம்.

மேலும் செய்திகள்