குண்டும், குழியுமான சாலை

Update: 2023-06-11 16:56 GMT

சேலம் மாவட்டம் ஆத்தூரில் காந்திநகர் செல்லும் ரெயிலடி தெருவில் குடிநீர் குழாய் அமைக்க குழிகள் தோண்டப்பட்டன. ஆனால் மீண்டும் சரிசெய்யாததால் தற்போது இந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதேஸ்வரன், ஆத்தூர், சேலம்.

மேலும் செய்திகள்