விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2022-07-23 13:03 GMT


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவில் வாசலில் இருந்து ஆற்றங்கரைக்கு செல்லும் சாலையில் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் ஏதோ காரணத்தால் சாலைப்பணியை பாதியில் நிறுத்தி விட்டனர்.இதன் காரணமாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சாலை அமைக்கும் பணியை முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருமணஞ்சேரி

மேலும் செய்திகள்