தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பஸ் நிலையத்தில் இருந்து சேலம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய பகுதிகளுக்கு 50 -க்கும் மேற்பட்ட பஸ்கள் செல்கிறது. இதேபோல் பொம்மிடி வழியாக தினமும் 100-கும் மேற்பட்ட வாகனங்கள், செல்கிறது. மெயின் ரோட்டில் இருந்து பஸ்நிலையம் உள்ளே செல்லும் பகுதியில் வாகன ஓட்டிகள் வேகமாக வருவதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே விபத்துக்களை தடுக்க அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-டோமினிக், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.