தெருவுக்கு விடிவு காலம் பிறக்குமா?

Update: 2023-05-24 17:48 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் பஸ் நிலையம் அருகே உள்ள ரெட்டியார் தெரு எப்போதும் பரபரப்பான தெருவாகும். 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இந்த தெருவில் தான் அரசு அங்கீகாரம் பெற்ற வங்கியும் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக தினமும் ஏராளமான பொதுமக்கள் இந்த வீதியை கடந்து செல்கின்றனர். ஆனால் இந்த வீதியில் பொதுமக்கள் நடந்து செல்ல கூட முடியாத அளவிற்கு, குண்டும், குழியுமாக இந்த வீதி உள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த தெருவுக்கு எப்போது விடிவு காலம் பிறக்குமோ? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

-தண்டாயுதபாணி, ஏரியூர்.

மேலும் செய்திகள்